மான்சிக்காக – பாகம் 62 – மான்சி கதைகள்

IMG-20160819-WA0007-1ஏதோ உதவிகேட்டு தான் தன்னிடம் இதையெல்லாம் சொல்கிறாள் என்று நினைத்த தர்மன் “ படிப்புக்காக யார் உதவினாலும் …

படிக்கனும்னு வைராக்கியத்தோடு படிச்சு தனியா இருந்து முன்னேறியிருக்கீங்க … உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கும்மா… உங்களுக்கு என்ன உதவி வேனும்னாலும் கேளுங்க எங்க குடும்பத்துல செய்ய தயாராக இருக்கோம்..

எங்க ஊர்ல சரியான மருத்துவ வசதி கிடையாது.. உங்களுக்கு சம்மதம்னா எங்க ஊர்லயே ஒரு ஆஸ்பிட்டல் கட்டித் தர்றோம் நீங்க அங்க வந்து எல்லாருக்கும் சேவை செய்ங்க..



உங்களை மாதிரி சேவை மனப்பான்மை உள்ளவங்க ஒரே இடத்தில் முடங்கிவிடக் கூடாது டாக்டர்… இதுதான் என் விருப்பம் ” என்று தர்மன் அன்பாக பேசி தனது விருப்பத்தை சொன்னார்… அவர் பேசியதை கேட்டு மீனாவும் ஜோயலிடம் வந்து “ அவரு சொல்றதும் சரிம்மா நீங்களும் எங்ககூடவே வந்துருங்க.. உங்களுக்கு பெரிய ஆஸ்பத்திரி கட்டித் தர்றோம்” என்று அழைக்க… நாம் எதையோ சொல்லப் போய். இவங்க வேற விதமா புரிஞ்சுக்கிட்டாங்களே என்ற சங்கடத்துடன் அவர்களைப் பார்த்தவள் “ இல்ல எனக்கு அந்த மாதிரி எதுவும் ஆசையில்லை…

நான் சொல்ல வந்தது வேறங்க” என்றாள் ஜோயல் தர்மன் குழப்பமாக அவளைப் பார்த்து “ எதுவாயிருந்தாலும் சொல்லுங்க டாக்டர்… நான் உதவி செய்றேன்” என்றதும் சத்யன் முன்னால் வந்து “ ஆமாம்மா எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க ஜோயல்.. என் மாமா கொடுத்த வாக்கை மீறமாட்டார் ” என்று அவளை தூண்டினான் சத்யன்… வீரேன் அடுத்து என்ன நடக்குமோ என்று அலறிப் போய் சத்யனின் முதுகுக்குப் பின்னால் மறைந்தான் நிமிர்ந்த ஜோயல்



“ நான் உங்க ஊருக்கு டாக்டரா வரவிரும்பலை… உங்க மருமகளா வர விரும்புறேன் அங்கிள்” என்றவள் சட்டென்று வெட்கத்துடன் தலைகுனிந்து “ நானும் உங்க மூத்த மகனும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம் அங்கிள்… எனக்கு அவரோடதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்… நீங்க எங்க காதலை ஏத்துக்கனும் அங்கிள்” என்று ஒருவாறு தன்கட்சிக்கு தானே வாதியாகி தனது தரப்பை சொன்னாள் .. இதை சற்றும் எதிர்பார்க்காத தர்மன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து

“ ஏன்மா இது விளையாட்டு சமாச்சாரம் இல்லை… உன் படிப்பு எங்க? இவன் எங்க? ரெண்டுபேருக்கும் சரியா வருமா?” என்றார்… “ எவ்வளவு படிச்சாலும் நானும் ஒரு பொண்ணு தானே அங்கிள்… எனக்கும் மனசிருக்கு தானே?” என்று பதிலுக்கு கேட்டாள் ஜோயல் அவளை யோசனையுடன் பார்த்த தர்மன் “ எல்லாம் சரிம்மா… ஆனா மான்சியோட இந்த நிலைமைக்கு இவன்தான் காரணம் அது தெரியுமா? என் மகளை வெட்டுனதே இவன்தான் தெரியுமா?” என்று கேட்க பட்டென்று நிமிர்ந்த ஜோயல்

See also  மான்சிக்காக - பாகம் 13 - மான்சி கதைகள்

“ எனக்கு தெரியும் அங்கிள்… ஆனா முன் கோபத்தால அதை செய்துட்டு அதன் பிறகு வீரேன் விட்ட கண்ணீர் எனக்குத்தான் தெரியும்… நீங்க எல்லாரும் துடிச்சதை விட அவருதான் தன் தங்கைக்காக அதிகமா துடிச்சார்.. ஒவ்வொரு நிமிஷமும் குற்றவுணர்வில் செத்து செத்து பிழைச்சார்… அவர் பட்ட வேதனையை நான் பார்த்தேன் அங்கிள்… அவர் தங்கச்சி மேல வச்சிருந்த பாசம் தான் என்னை அவர்பக்கம் ஈர்த்தது..



அந்த ஈர்ப்புதான் காதலா மாறியது.. அவர் கொஞ்சம் முன்கோபி தான்.. என்னால அவரை மாத்தமுடியும் அங்கிள்.” என்றவள் இறுதியாக உடைந்து போய் அவரை நோக்கி கண்ணீருடன் கையெடுக் கும்பிட்டு “ தயவுசெய்து என்னை உங்ககூட கூட்டிட்டுப் போயிடுங்க அங்கிள் அவரைப் பிரிஞ்சு என்னால இங்க இருக்கமுடியாது ” என்று ஜோயல் குலுங்கியதும்.. அதுவரை சத்யனின் பின்னால் நின்று ஜோயல் பேசுவதை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்த வீரேன் வேகமாக வெளியே வந்து அவள் கையை ஆறுதலாகப் பிடித்து “அழாத ருத்ரா” என்றான்.

ஜோயலின் வார்த்தைகள் தர்மனை தலைகுனிய வைத்தது… பார்த்து பத்து நாட்களே இவள் சொல்லி தன் மகனின் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருக்கு.. வீரேன் முன்கோபி தான் .. அதை சத்யனின் பிரச்சனையின் போதே பார்த்துவிட்டு அப்போதே அவனுக்கு புத்தி கூறியிருந்தால் இன்று இவள் வந்து ‘ அவரை நான் திருத்துகிறேன் என்று சொல்வாளா? ஆனாலும் இவ்வளவு படித்த ஒருத்தி தன் மகன்மீது காதல் கொண்டு கண்ணீர் விடுவது அவருக்கு கர்வமாய் இருந்தது …

இவளால் தான் தன் மகன் வாழ்வு சிறக்கனும் என்று விதி போலிருக்கிறது என்று நினைத்தார்.. திரும்பி தன் மனைவியைப் பார்த்தார் .. மீனாவின் முகத்தில் எதைப் படித்தாரோ தெரியவில்லை.. புன்னகையுடன் ஜோயலிடம் திரும்பினார்… “ ஏன்மா உனக்கு யாருமே சொந்தக்காரங்க இல்லையா?” என்று கேட்டார்.. அவர் அப்படி கேட்டதும் ‘ சொந்தகள் அற்ற அனாதை என்று நம்மை தட்டிக்கழித்து விடுவாரோ என்ற பயத்துடன்



“ புதுக்கோட்டையில இருக்காங்க ஆனா யார்கூடயும் எந்த தொடர்புமில்லை” என்றாள் வேதனையுடன்.. தாடையை தேய்த்தபடி மகனைப் பார்த்தவர் அவன் முகத்தில் இருந்த வேதனையை எண்ணி உள்ளம் உருகினாலும்… அதை வெளிக்காட்டாமல் “ அப்போ யார்கிட்ட போய் உன்னை முறையா பொண்ணு கேட்டு எங்கவீட்டு கூட்டிப் போறது?” என்றார்… அவர் எதற்காக கேட்டார் என்று புரிந்ததும் தன் கையைப்பற்றியிருந்த வீரேனையும் இழுத்துக்கொண்டு “ அங்கிள்” என்று அவர் காலில் விழுந்தாள்… உடனே மீனா வந்து ஜோயலை தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டு

See also  மனசுக்குள் நீ - பாகம் 01 - மான்சி கதைகள்

“ இந்த ஆன்டி அங்கிள் எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா அத்தை மாமான்னு கூப்பிட கத்துக்கோ” என்று மாமியாராக தனது முதல் அறிவுரையை மருமகளுக்கு வழங்கினாள்… சத்யன் மான்சியுடன் தர்மனிடம் வந்து “ உங்களுக்கு முறையாப் பொண்ணு வந்து கேட்கனும் அவ்வளவு தானே? ஜோயலை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் நீங்க எல்லா சீர் வரிசையோட முறையா வந்து கேளுங்க…

ஆனா ஒன்னு இந்த முரட்டுப் பயலுக்கு பொண்ணு குடுக்குறதா வேனாமான்னு? நாங்க யோசிச்சுதான் பதில் சொல்வோம்” என்று கெத்தாக பேசியவன் மனைவியிடம் திரும்பி “ என்னம்மா நான் சொல்றது சரிதானே?” என்று அபிப்பிராயம் கேட்டாள்.. ஆண்கள் தான் கூஜா என்ற வழக்கத்தை மாத்தி “ ஆமா ஆமா ரொம்ப கரெக்ட்… இவனுங்க எல்லாம் முரடனுங்க… நம்ம டாக்டரை அவங்களுக்கு கொடுக்குறதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசனை பண்ணித்தான் செய்யனும்” என்று நீட்டி முழக்கினாள்..



மீனா ரோஷத்துடன் தன் மகளைப் பார்த்து “ யாரைடி முரடன்னுங்கன்னு சொல்ற? நீ என்ன பொண்ணு தர்றது… டேய் வீரா மருமகளா கூட்டிக்கிட்டு போய் கார்ல ஏறுடா” என்று மகனுக்கு உத்தரவிட்டாள் .. தர்மன் மருமகனைப் பார்த்து சிரித்து “ மாப்ள என் மவன் சிங்கக்குட்டியா… பார்த்தியா பத்தே நாள்ல எவ்வளவு படிச்சு இவ்வளவு பெரிய உத்தியோகத்துல இருக்குறவளையே அவனுக்காக கதற வச்சிட்டான்.. எனக்கு அவன் வார்த்தைதான் போதும்”

என்று மகனின் பத்துநாள் சாதனையைப் பற்றி பெருமை பேசியவர் வீரேனிடம் திரும்பி “ நீ என்னடா சொல்ற? முறையாவது மண்ணாவது இப்பவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிரலாமா? ” என்று சிரிப்புடன் கேட்க… தன் அப்பா வெகுநாட்கள் கழித்து தன்னிடம் இயல்பாக பேசியதால் பூரித்த வீரேன் “ இல்லப்பா நான் தங்கச்சி சொல்றததான் கேட்பேன்..

இனிமேல் அவ என்ன சொல்றாளோ அதைதான் செய்வேன்” என்று உறுதியாக கூறினான்.. மகனின் வார்த்தையை கேட்டு பெற்றவர்கள் கண்கலங்கினார்கள்… “ சரிடா மாப்ள சொல்ற மாதிரியே ஜோயல் அவங்க வீட்டுல இருக்கட்டும் ஒரு நல்லநாள் பார்த்து முறையாவே போய் அவங்க வீட்டு பொண்ண கேட்கலாம்” என்று தர்மன் சொல்லி முடித்தார் மான்சி ஜோயலின் கையைப் பற்றிக்கொண்டு “ வாங்கண்ணி போகலாம்” என்றதும் எல்லோரும் ஊருக்கு கிளம்பினார்கள்….



ஆஸ்பிட்டலில் நீண்ட லீவுக்கு எழுதி கொடுத்துவிட்டு அவர்களுடன் கிளம்பினாள் மான்சியின் அண்ணி… ஜோயலின் வீட்டருகே காரை நிறுத்தி அவளுக்கு தேவையானவற்றை எடுப்பதற்காக ஜோயல் வீரேன் இருவரும் அவசரமாக உள்ளே போனார்கள்.. உள்ளே நுழைந்ததும் சந்தோஷ மிகுதியில் அவனை கட்டிக்கொண்டு உதட்டை கவ்வினாள் ஜோயல்… வீரேன் அவள் இடுப்பை பற்றி தன் உயரத்துக்கு உயர்த்திக்கொண்டு பதிலுக்கு அவசரமாக அவள் இதழ்களை கவ்வி ஆவேசமாக உறிஞ்சினான்… வெளியே எல்லோரும் காரில் காத்திருப்பதை உணர்ந்து பிரிந்த இருவரும் வேண்டியவைகளை எடுத்துக்கொண்டு வந்து காரில் ஏறினார்கள்…

See also  மனசுக்குள் நீ - பாகம் 60

சத்யனுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்த வீரேனைப் பார்த்து “ வீரண்ணா உன் உதட்டுல என்னமோ ஒட்டிருக்குப் பாரு” என்று மான்சி குறும்புடன் கூற… அவன் திகைப்புடன் வாயை துடைத்துக்கொண்டு பிறகு தங்கை குறும்பு செய்கிறாள் என்று புரிந்து வேனாம்மா என்பது போல் கையெடுத்துக் கும்பிட்டான்

“ ஏய் பாவம்டி அழுதுடப் போறான்” என்று மனைவியை ரகசியமாக அடக்கினான் சத்யன்…. கொஞ்சநேரத்தில் மான்சி அவனை சீண்டி

“ மாமா எனக்கும் அதேமாதிரி வேனும்… இப்பவே” என்று அவன் காதருகில் கேட்க…“ ஸ்ஸ்ஸ் அப்பா அம்மா இருக்காங்க.. வீட்டுக்குப் போய் நிறைய தர்றேன்.. இப்போ சைலன்ட்டா வாடி” என்று மனைவியின் கையைப்பிடித்து ரகசியமா கூறினான்… இந்த பத்து நாளில் அந்த மருத்துவமனையே காதலர்களின் சுற்றுலாத்தளம் போல் மாற்றிவிட்டு பெருமையோடு மான்சி தனது ஊருக்குப் போனாள்

“ சும்மா கிடந்த இடங்களையெல்லாம்..

“ சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது..

“ உன் காலடித்தடங்கள் பட்டதால்!

Leave a Comment

error: read more !!