பொம்மலாட்டம் – பாகம் 19 – மான்சி தொடர் கதைகள்

ஆவேசமாக எழுந்த சத்யன் “என்னடா பொறுப்பு இருக்கு? தினமும் பெட்லயே யூரின் போய்ட்டு படுத்திருப்பா… அதை க்ளீன் பண்ற பொறுப்பு எனக்கிருக்கனுமா? அல்லது தினமும் இவளை குளிக்க வச்சு சாப்பிட வச்சு பனிவிடை செய்ய நான் ஒன்னும் தியாகி கிடையாது….

சராசரி மனுஷன் தான்… எனக்கும் ஆசைகள் இருக்கு, கனவுகள் இருக்கு…. என் மனைவி என்கிட்ட காதலோட இருக்கனும்.. எல்லாவிதத்திலும் அவ என்னை புரிஞ்சுக்கனும்… ரெண்டு பேரும் என் அக்கா மாமா மாதிரி எல்லாருக்கும் உதாரணமா வாழனும்.. இப்படி ஏகப்பட்ட கனவுகள் இருக்கு ஆதி… ஆனா இவ?” என்று நிறுத்தியவன் வேகமாக திரும்பி மான்சியைப் பார்த்தான்….



தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு யாரோ யாரையோ யாரிடமோ பேசுகிறாற்கள் என்பது போல் நின்றிருந்தாள்….. நச்சென்று தனது தலையில் அடித்துக் கொண்டான் சத்யன்… “ஒன்னுக்கும் உதவாத ஜடம்டா இவ…. என் பெயரைக் கூட இவ அம்மா சொன்னா தான் தெரியும்… என்கிட்ட பேசினது… என்னைப் பார்த்து சிரிச்சது… என் கூடவே இருந்தது…

இன்னும் சொல்லப் போனா இந்த ஒரு வாரமா என் பெட்ல என் கூட இருந்தது…. எங்களுக்குள்ள நடந்தது எல்லாமே ஒருத்தர் சொல்லித்தான்னு தெரிஞ்சப்பிறகு?” சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்திவிட்டு தனது அக்காவின் அருகே மண்டியிட்டு அப்படியே கவிழ்ந்து முகத்கை மூடிக்கொண்டு “நினைக்கவே அருவருப்பா இருக்குக்கா…. என்கூட இருக்கிறதால அவ சந்தோஷமா இருக்கிறாளானு கூடத் தெரியாம…

எந்தவொரு ரியாக்ஷ்னும் காட்டாம அவ இருக்கும் போது என் மேலதான் குறையோ அப்படின்னு நான் பட்ட வேதனை? இந்த நிலையை தினமும் சந்திக்க என்னால முடியாது…” என்றான் தீர்மானமாக… நண்பனின் அருகில் அமர்ந்த ஆதி “சத்யா… உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை… கணவன் மனைவின்னா உடலுறவு மட்டும் தான் அவங்க வாழ்க்கை என்பதில்லை…. அதையும் தாண்டிய பல விஷயங்கள் இருக்குடா” என்றான் வேதனை குரலில்….



விருட்டென்று எழுந்தான் சத்யன்…. “ஒத்துக்கிறேன்… ஹஸ்பண்ட் ஒய்ப்ன்னா செக்ஸ் மட்டுமே லைப் கிடையாது தான்… அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கு தான்…. ஆனா அந்த பல விஷயங்களில் ஒன்றையாவது இவளால் செய்ய முடியுமா? சரி அதை விடு ஆதி… கணவன் மனைவிக்குள்ள மிக முக்கியமானது புரிதல்…. அந்த புரிதலை இவகிட்ட இருந்து நான் எதிர்பார்க்க முடியுமா? எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு இவளால தெரிஞ்சிக்க முடியுமா?

இவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு நான்தான் தெரிஞ்சுக்க முடியுமா ஆதி? இன்னும் வெளிப்படையா சொல்லனும்னா நீ சொன்னியே அந்த உடலுறவு மட்டும் தான் வாழ்க்கையில்லைனு…. இப்போ அது மட்டும் தான் எங்களுக்குள்ள நடக்குது… அதுவும் மூனாவதா ஒரு நபர் சொல்லிக் கொடுத்து நடந்திருக்கு” என்று ஆத்திரமாக மொழிந்தான்…சத்யனின் இத்தனை கேள்விகளுக்கும் யாரிடமும் பதிலில்லை… அவனது வலிகள் புரிந்ததால் அதிர்வுடன் நின்றிருந்தனர்…

See also  மான்சிக்காக - பாகம் 03 - மான்சி கதைகள்

மதி தனது மைத்துனனை நெருங்கி வந்து இழுத்து அணைத்துக் கொண்டு “தப்புப் பண்ணிட்டமே மாப்ள” என்று குமுறினான்…. “இல்ல மாமா… இது என் விதி….” என்று இவனும் கலங்கி நிற்க…. தம்பியின் பேச்சுக் கொடுத்த அதிர்ச்சி விலகி எழுந்த வாசுகி பவானியிடம் வந்து “நான் மான்சியைப் பத்தி எதுவும் சொல்ல விரும்பலை…. இதில் அவளுக்கு எந்த சம்மந்தமும் இல்லை…



நீங்க? நீங்கதான் மொத்ததுக்கும் காரணம்….. எங்க குடும்பத்தோட சந்தோஷத்தையே குலைச்சுட்டீங்கம்மா…. தயவுசெஞ்சு போயிடுங்க…. இப்படி என் தம்பி தினமும் அழுவுறதை என்னால பார்க்க முடியாது…” என்றவள் வாசலை நோக்கி கை நீட்டி “உங்க மகளோட நீங்க வெளியேறலாம்” என்றாள் நிர்சிந்தையாக…. மனைவியைப் பார்த்த மதி “இரு வாசு…” என்று தடுக்க முயன்றான்…. “இல்ல மாமா… அவங்க போயிடட்டும்….

இதுபோல ஒரு வாழ்க்கை என்னால வாழ முடியாது… இந்த ஆறு நாளா நான் பட்ட வேதனைக்கெல்லாம் இன்னையோட முடிவு கட்டனும்” என்ற சத்யனும் வாசலை நோக்கி கைகாட்டி பவானியைப் பார்த்து “போயிடுங்க…” என்றான்… பவானி,, பெயருக்கேற்றபடி ஒரு ரோஷக்காரனுக்கு மனைவியாக வாழ்ந்து… யாருடைய ஆதரவுமின்றி ரோஷமா வாழ்ந்து காட்டியவளாயிற்றே? “இரக்கமில்லாதவங்க வீட்டுல நானும் என் மகளும் இருக்க மாட்டோம்…. போயிடுறோம்” என்றவள் மகளை கைப் பற்றி அழைத்துக் கொண்டு ஆதியிடம் வந்தாள்….

“தம்பி நாங்க எங்க வீட்டுக்கேப் போறோம்… அங்கருந்து ஆள் அனுப்புறேன் எங்க பொருளையெல்லாம் கொடுத்தனுப்பிடுங்க” என்றுவிட்டு வேகமாக வாசலை நோக்கிச் சென்றாள்…. தாயின் இழுப்புக்கு கூடவே சென்றாலும் திரும்பித் திரும்பி சத்யனைப் பார்த்துக் கொண்டே சென்றாள் மான்சி….தம்பிக்கு ஒரு குடும்பம் அமைந்து விட்டது… தனது கடமை முடிந்துவிட்டது என்றிருந்த வாசுகிக்கு இந்த இடி போன்ற பிரச்சனையை தாங்கும் சக்தியின்றி அப்படியே மயங்கிச் சரிந்தாள்…



பதறிப் போய் மனைவியைத் தூக்கிய மதி படுக்கையறைக்குச் செல்ல ஆதியும் சத்யனும் பதட்டமாகப் பின்னால் ஓடி வந்தனர்…. அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் வரவழைக்கப்பட்டார்…. பரிசோதித்த மருத்தவர் “கர்ப்பிணியை கவனமாகப் பார்த்துக்கத் தெரியாதா? இப்படி அழ விட்டிருக்கீங்களே?” என்று அதட்டியதும் தான் மதிக்கே விஷயம் புரிந்தது….

வீட்டிற்கு ஒரு புது உயிர் வரப் போவதை எண்ணி சந்தோஷப்படுவதா? அல்லது உயிராக அழைத்துவரப் பட்ட ஒருத்தியை வெளியேற்றியதை எண்ணி வேதனைப்படுவதா என்று மூன்று ஆண்களுக்கும் புரியவில்லை… “ரொம்ப வீக்கா இருக்கா…. அதிர்ச்சி தரும் சம்பவங்களோ… கடுமையான வாக்குவாதங்களையோ தவிர்த்து கவனமாப் பார்த்துக்கங்க…” என்று கூறிவிட்டு டாக்டர் சென்று விட மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டு அருகே அமர்ந்தான் மதி…

See also  மனசுக்குள் நீ - பாகம் 28 - மான்சி தொடர் கதைகள்

மயக்கம் தெளிந்து கண்விழித்த வாசுகி “என் தம்பியோட வாழ்க்கையே நாசமாப் போச்சு… இப்போ இது தேவையா?” என்று துன்பமாகக் கூறவும் பதறிய சத்யன் அவளது வாயைப் பொத்தி “அப்புடி சொல்லாதக்கா…. நடந்ததை மறக்க இந்த குழந்தை தான் நமக்கு வழி….” என்றான்…. “இல்ல அப்பு என்னால சந்தோஷப்பட முடியலை” என்று அழும் சகோதரிக்கு ஆறுதல் கூற வார்த்தைகளின்றி தவித்தான் சத்யன்…..



அவர்களைத் தனியாக விட்டுவிட்டு வெளியே செல்வோம் என்று ஆதி சத்யனுக்கு ஜாடை செய்யவும்…. மதி மனைவியுடன் இருக்க…. சத்யனும் ஆதியும் அறையை விட்டு வெளியே வந்தனர்… தனது அறைக்குச் செல்ல திரும்பிய நண்பனின் தோள் தொட்ட ஆதி “எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காத சத்யா… காலம் எல்லாத்தையும் மாத்தும்” என்றான்…. சத்யன் பதில் பேசவில்லை… மவுனமாக தலையசைத்து விட்டுச் சென்றான்…..

Leave a Comment

error: read more !!