பொம்மலாட்டம் – பாகம் 33 – மான்சி தொடர் கதைகள்

“ம் ம் புரியுது செபாஸ்ட்டியன்… ஆனா அதை நாம முன்னாடியே செய்திருக்கனும்…. இப்போ ரொம்ப கிட்டத்தில் வந்தப்பிறகு அனத்தீஸியா பயண்படுத்தினால் மான்சியின் நிலைமையில் வேறு விதமாகிவிட வாய்ப்புண்டு….

மான்சி கொஞ்சம் டயர்டானாக் கூட நாம உள்ளே போயிடலாம்” என்றார் பெண் மருத்துவர்… சத்யனுடன் இருந்த மான்சியோ வலி அதிகரிக்கும் போது பற்களை கடித்து சத்யனின் உடைகளே கிழியும்படி மூர்க்கமாக நடந்துகொண்டாள்… மனைவியின் நிலையைக் கண்டு கதறிவிட்டான் சத்யன்….வலியினைக் கூற முடியாமல் அவனது சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டு “அத்தான் அத்தான்” என்று அலறியவளை அணைக்க முயன்றாலும் முடியவில்லை… திடீரென்று அவன் நெஞ்சில் கை வைத்து முரட்டுத் தனமாகத் தள்ளினாள்…. கதவருகே நின்றிருந்த டாக்டர்,

” சத்யன்… இன்னும் கொஞ்ச நேரம் தான் மான்சியால் இப்படி நடந்து கொள்ள முடியும்… பிறகு பிரசவிக்கும் நேரம் கொஞ்சம் தளர்ந்திடுவா… அப்போ நாங்க உள்ளே வந்துடுவோம்…. ஆனா பிட்ஸ் வந்துடக்கூடாது சத்யன்… சாந்தப்படுத்துங்க… புஷ் பண்ணச் சொல்லி சொல்லுங்க சத்யன்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்… வேறு வழியில்லை…

மான்சியின் விரிந்த கால்களுக்கிடையே சென்ற சத்யன் அவளது முதுக்கடியில் கைகொடுத்துத் தூக்கி தன் முகத்தருகே கொண்டு வந்து… “நான் அத்தான்டா கண்ணம்மா…” என்றபடி அவளது இதழ்களை கவ்வினான்… எப்போதுமே மான்சி உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாகும் நேரங்களில் சத்யன் கொடுக்கும் இதழ் முத்தம் தான் அவளை சாந்தப்படுத்தும்…இம்முறை அது பெரியதாக பலன் தரவில்லையென்றாலும் ஓரளவுக்கு அமைதியானவளை அப்படியே அணைத்து அமைதிப்படுத்த முயன்றான்….தனது அப்பா அம்மா… உலகில் உள்ள அனைத்துக் கடவுள்கள் என அனைவரையும் கண்ணீருடன் வேண்டினான்…. அவனது அணைப்புக்குள்ளாகவே மான்சி சற்று சோர்வது போலிருக்க…

பதட்டமாக முகத்தை கைகளில் தாங்கிப் பார்த்தான்… அவனது கண்களைப் பார்த்தவள் “அத்தான்….” என்று அவனது முகத்தை வருடிய அந்த நிமிடம் முட்டி மோதிய வயிற்றுப் பிள்ளையை பெரிய மூச்செடுத்து நெற்றி நரம்புகள் புடைக்க…. கண்கள் ரத்தமென சிவக்க முக்கி வெளியேத் தள்ள முயன்றாள்… புரிந்து போனது சத்யனுக்கு…. தன்னை இறுக அணைத்திருந்தவளை விலக்க முயன்றான்… முடியவில்லை…..

அமர்ந்த நிலையில் இருந்தவளைப் படுக்க வைக்க முயன்றான்…. அதுவும் முடியவில்லை…. முரட்டுத்தனமாக அணைத்திருந்தாள் மான்சி… இவன் தரையில் நிற்க… அவள் கால்களை விரித்து அமர்ந்த நிலையில் சத்யனை அணைத்திருந்தாள்….. மான்சியிடம் அடுத்த முக்கல் வரும்போது முயன்று தனது உடலை சற்றுத் தளர்த்தி இருக்கும் இடையைக் குனிந்து நோக்கினான்….குழந்தையின் தலை மான்சியின் கருவறையின் வாயிலில் வந்து நின்றிருந்தது…. இதயம் நடுங்க.. வயிறு குலுங்க… “டாக்டர்….” என்று இவன் கத்தியதில் மருத்துவமனையே கிடுகிடுத்தது.. டாக்டர் அறைக்குள் ஓடி வரவும் மான்சி தளர்ந்து படுக்கையில் விழவும் சிரியாக இருக்க…. பிதுங்கிக் கொண்டு வந்து விழுந்த குழந்தையை சட்டென்று கைகளில் ஏந்தினான் சத்யன்…. தன் மகனை கைகளில் ஏந்திய அந்த நிமிடம் அவன் அழுத அழுகையைக் கண்டு மருத்துவரின் கண்களும் கூட கசிந்தது…

மயக்கமாகியிருந்த மான்சியை சுத்தப்படுத்துவதில் செவிலியர்கள் ஈடு பட… “இனிப் பயமில்லை சத்யன்…” என்றவர் அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பினார்…. அறைக்கு வெளியே வந்தவன் தனது சகோதரியைக் கட்டிக் கொண்டு “இனி எனக்குக் குழந்தையே வேண்டாம்க்கா… மான்சி பட்ட கஷ்டத்தை என்னால பார்க்க முடியலைக்கா” என்று கதறித் துடித்துவிட்டான்….

செபாஸ்ட்டியன் ஆதி மதி பவானி வாசுகி என அனைவரும் கூட சத்யனை ஆறுதல் படுத்தினர்…. மீண்டும் மான்சிக்கு மயக்கம் தெளிந்த போது சத்யன் அவளருகில் இருந்தான்…. காலியாகிப் போயிருந்த தனது வயிற்றைப் பார்த்து மிரண்டு “அத்தான் பாப்பா?” என்றவளை முத்தமிட்டு “இதோப் பாரு நம்ம பாப்பா” என்று உற்சாகமாகக் கூறினான்…. தனது மகனைப் பார்த்ததும் மான்சியின் முகத்தில் பரவசம்….“எப்புடி வெளிய வந்துச்சு?” என்று கேட்டவளுக்கு பதில் கூற முடியாது இவன் தவிக்க…. “அது ஒரு தேவதை வந்து உன் வயித்துக்குள்ள இருந்து எடுத்து வெளிய வச்சிட்டாங்க” என்று ஆதி கூற…. “தேவதைனா யாரு?” என்று கேட்டாள்… “யப்பா சாமி மறுபடியும் மொதல்லருந்தா? டேய் மச்சி நீயே இவளை டீல் பண்ணு… நான் என் மருமகனைக் கவனிச்சிட்டு வர்றேன்” என்ற ஆதி குழந்தையின் அருகே சென்றான்..

அதன்பிறகு குழந்தையைக் கவனித்துக் கொள்வது எப்படி என்று மான்சிக்கு சொல்லிக் கொடுத்துப் பார்த்தான்… அவளுக்கு அது புரியவில்லை என்றதும் பாலுண்ணும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவனும் பவானியும் தான் குழந்தையைக் கவனித்துக் கொண்டனர்…

ஆனால் சத்யா அத்தானோட பாப்பா மீது மான்சி அதிக அன்பு கொண்டாளா என்று கூட யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை… மீண்டும் அவளது உலகம் அத்தான் மட்டுமே என்றானது…. இவர்களின் மகனுக்கு சாஸ்வத் என்று பெயரிட்டாலும் மான்சியைப் பொருத்தவரை அத்தானோட பாப்பா தான் அவளுக்கு…

” என் வாழ்வில்….

” வாழ்க்கைத் துணையாக..

” வசந்தமென வந்து…

” அர்த்தங்கள் பலவற்றுக்கு…

” அடையாளம் கொடுத்து…

” ஆண் என்றிருந்த எனக்கு…

” அம்மாவென்ற அடைமொழி தந்த…

” எனக்குச் சொந்தமான சொர்க்கமே…

” இனி மாற்றங்கள் என்பது…

” என் வாழ்வில் வேண்டாமே…

” என்றும் நீ என் சேயாக..

” நான் உன் தாயாக!

நன்றி :- சத்யன்

Kathaiya Pathi Enna Nenaikureenga

Skip to toolbar