சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரம். வீட்டு வேலையை முடித்து விட்டு தன் வீட்டுக்குக் கிளம்பிய கற்பகம் வீதிக்கு வந்ததும் தனது புடவைத் தலைப்பை இழுத்துச் சொருகியபடி வழக்கம் போல இன்றும் இடது பக்கத்தில் இருக்கும் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள்.
முதலில் அவள் பார்வை அந்த வீட்டின் ஜன்னலுக்குத்தான் போனது. வழக்கமாக திறந்திருக்கும் அந்த ஜன்னல் இன்று சாத்தியிருந்தது. இன்னும் அருகில் வந்து முன் பக்கத்தில் இருக்கும் கதவைப் பார்த்தாள். கதவிலும் பூட்டுத் தொங்கியது.